அதிவேக வளர்ச்சிகாணும் புதிய தொழில்நுட்பம், உலகமயமாக்கலுக்கு குறைந்து வரும் ஆதரவு ஆகியவற்றோடு ஆசியாவின் பொருளியலும் முக்கியத்துவமும் வளர்ச்சிகண்டு வரும் நிலையில், சமூகம் முன்னோக்கிச் செல்ல வர்த்தகத் தலைவர்கள் புத்தாக் கத்திலும் ஊழியர் வளர்ச்சியிலும் முதலீடு செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
'ஸ்டுவர்ட்ஷிப் ஏஷியா ரவுண்ட்டேபிள்' எனும் கருத்தரங் கில் வர்த்தகத் தலைவர்களிடம் நேற்று பேசிய திரு ஹெங், போட்டித்தன்மையுடனும் காலத் துக்குப் பொருத்தமானதாகவும் திகழ விரைந்து புத்தாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
குறிப்பாக, தொழில்நுட்பம் மேம்பாடு கண்டுவருவதுடன், பொருளியலும் முக்கியத்துவமும் ஆசியாவை நோக்கித் திரும்பி யுள்ள வேளையில் இது முக்கியமா னது. விநியோக செயல்பாட்டு முறையை இது மாற்றக்கூடும் என்றார் திரு ஹெங்.
தொழில்நுட்பத்தின் புதிய மேம்பாடுகளை அறிந்து, நடப்பில் உள்ள வர்த்தக செயல்முறையில் அவற்றை எவ்வாறு ஒருங்கிணைக் கலாம் என்பதை நிறுவனங்கள் ஆராய வேண்டும். புதிய பொருட் கள், சேவைகளை உருவாக்க புத்தாக்கம் உதவுகிறது. இது வேலைகள் அவற்றின் செயல் முறைகளின் மறுவடிவமைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால், சிறந்த வேலைகள் உருவாகி ஊழி யர்கள் அதிக சம்பளம் பெறலாம்.
அதேநேரத்தில், புத்தாக்கம், தொழில் உருமாற்றத்தில், குறுகிய கால லாபத்துக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் இடையே எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார்.
நிறுவனங்கள் நீண்ட காலத் துக்கான புத்தாக்கத்தில் முதலீடு செய்யத் திட்டமிடவும் தயாராக இருக்க வேண்டும். அரசாங்கம் 80% பொருளியலை உள்ளடக்கிய தனது 23 தொழில்துறை உரு மாற்றத் திட்டங்கள் மூலமாக பொருளியல் மறுசீரமைப்புக்கு உதவுகிறது என்பதை நிதியமைச் சருமான ஹெங் சுட்டினார்.
முதலீடு செய்ய வேண்டிய மற் றொரு துறை மக்கள். ஊழியர் திறனும் ஆற்றலும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு வர்த்தகங்களின் நீண்டகால வளர்ச்சி அமையும். மேலும் நிறு வனங்கள் ஊழியர்களின் உடல் நலம், பாதுகாப்பு, நலவாழ்வையும் கவனிக்க வேண்டும். நியாயமான வேலையிட செயல்பாட்டுக்கு நிறுவனங்கள் வளர்ச்சி காணும் வேலைவாய்ப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
நிறுவனங்கள் சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், பாதிக்கப்படக் கூடியவர்களைப் பராமரிக்க வேண்டும் என்றார் திரு ஹெங்.

