சாங்கி விமான நிலையத்தில் போலிஸ் மனித இயந்திரம்

சாங்கி விமான நிலையத்தில் போலிஸ் மனித இயந்திரம்

1 mins read

சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து போலிஸ் மனித இயந்திரம் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்த காணொளியில், ஆரஞ்சு, கறுப்பு நிறங்களில் அமைந்த, ஒரு மீட்டர் உயரம் கொண்ட மனித இயந்திரத்தில் உள்ள மின்னணுத் திரையில் 'போக்குவரத்து அமலாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது ஓரிடத்தில் நின்று, அங்கு சாலையோரத்தில் அனுமதிக்கப்படாத இடத்தில் காத்திருந்த காரை நோக்கி 'காரை இங்கு நிறுத்தக்கூடாது' என்ற வார்த்தையைக் காட்டியது. சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வரும் செர்டிஸ் சிஸ்கோ நிறுவனம் இந்த மனித இயந்திரத்தைச் சோதித்துவருகிறது.