சிங்கப்பூர் 'ஹெச்ஐவி' தரவுத்தள கசிவு வழக்கு அமெரிக்காவில் தொடங்கியது

சிங்கப்பூர் 'ஹெச்ஐவி' தரவுத்தள கசிவு வழக்கு அமெரிக்காவில் தொடங்கியது

2 mins read

சிங்கப்பூரின் ஹெச்ஐவி தரவுத்தள கசிவுக்குக் காரணமான அமெரிக்கர் மிக்கி ஃபரேரா புராச்செஸ், கசிவு பற்றி பொதுமக்களுக்குத் தெரிய வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2016ஆம் ஆண்டில், சிங்கப்பூரிலிருந்த தனது கணினி இணைப்புத் தளத் திலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும்படி தனது தாயி டம் கூறியிருந்தார். அந்தக் கோப்பு களில் ஹெச்ஐபி பதிவேடும் உள் ளடங்கியிருக்கக்கூடும்.

புராச்செஸுக்கு எதிரான வழக்கு அமெரிக்காவின் கென்டக்கி மாநில நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் முதல் நாளான ஜூன் 3ஆம் தேதி சாட்சியம் அளித்த அவரது தாயார் திரேசா கிங், கென்டக்கியில் இருந்துகொண்டு பதிவிறக்கம் செய்த கோப்புகளைத் தான் பார்க் கவில்லை என்று தெரிவித்தார். தனது மகன் பார்க்கக்கூடாது என்று சொன்னதால் கோப்புகளைப் பார்க்கவில்லை என்றார் அவர்.

"அது அவனுக்கு வாழ்வா சாவா என்றளவுக்கு முக்கியம் என்று சொன்னான். அதனை நான் அவனுக்காகப் பதிவிறக்கம் செய்தாக வேண்டும் என்றான்," என்றார் திருமதி கிங். "இதற்காக அவன் என்மீது மிகுந்த கோபப்பட்டான்," என்றும் கூறினார் கென்டாக்கியில் வாழும் ஓய்வு பெற்ற கல்வியாளர் திருமதி கிங்.

புராச்செஸ் சிங்கப்பூரில் திரு டிய தரவுத்தளத்தை எவ்வாறு கென்டக்கிக்குக் கொண்டு சென் றார் என்பதைத் திருமதி கிங்கின் சாட்சியம் புலப்படுத்தியது. இச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டு களுக்குப் பிறகு, தனது கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் தரவுத்தளத்தை வெளியிடப் போவ தாகச் சிங்கப்பூர் அதிகாரிகளை மின்னஞ்சல்வழி அவர் மிரட்டினார்.

சிங்கப்பூரில் திருடப்பட்ட அடையாளப் பத்திரங்களின் தொடர்பில் 34 வயது புராச்செஸ் அமெரிக்காவில் மூன்று குற்றச் சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.