மேலும் இரண்டு மாணவர்களுக்கு சிக்குன்குன்யா சிகிச்சை

மேலும் இரண்டு மாணவர்களுக்கு சிக்குன்குன்யா சிகிச்சை

1 mins read

தாய்லாந்துக்குக் கல்விச் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் கலைப் பள்ளி மாணவர்களில் மேலும் இருவ ருக்கு சிங்கப்பூரில் தொடர்ந்து சிக்குன்குன்யா சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் ரட்சாபுரி மாநிலத் துக்குக் கல்விச் சுற்றுலா சென்ற அப்பள்ளியின் 25 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் திரும்பி விட்டனர் என்று சிங்கப்பூர் கலைப் பள்ளியின் முதல்வர் மேரி சியா நேற்று தெரிவித்தார்.

தாய்லாந்தில் ஒன்பது மாண வர்களும் ஆசிரியர் ஒருவரும் சிக்குன்குன்யா கிருமியால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இப் போது குணமாகி விட்டார்கள். ஆனால் இருவர் தொடர்ந்து அக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று முன்தினம் தெரிய வந்தது.

மாணவர் ஒருவருக்கு டான் டோக் செங் மருத்துவமனையில் வெளிநோயாளி சிகிச்சை அளிக் கப்பட்டது என்றும் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிப்பட் டுள்ளார் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி பெற்றோர்களுக்குத் தெரி விக்கப்பட்டது என்றும் அவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் இருக்க பேங்காக்குக்குச் சென்ற னர் என்றும் அப்பள்ளி கூறியது.

இவ்வாண்டு தொடக்கம் ஜூன் மாதம் 3ஆம் தேதி வரை சிங் கப்பூரில் 11 சிக்குன்குன்யா சம் பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற் றில் 10 சம்பவங்கள் வெளிநாட்டி லிருந்து பரப்பப்பட்டவை.