கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியில் சம்பந்தப்பட்டவருக்கு ஈராண்டு சிறை

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியில் சம்பந்தப்பட்டவருக்கு ஈராண்டு சிறை

2 mins read

குற்றக் கும்பல் ஒன்றுடன் சேர்ந்து சிங்கப்பூரில் அரசு அமைப்புக்கு எதிராக மோசடியில் ஈடுபட்ட வேலையில்லாத ஆடவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது.

முன்னாள் துப்புரவு ஊழியரான 58 வயது திரு மாணிக்கம் பிர காசம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப் பூர் அமைப்பை ஏமாற்றி பெறப்பட்ட சுமார் $40 மில்லியன் பணத்திலி ருந்து எடுக்கப்பட்ட $1 மில்லியன் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க உதவினார் என்று குற்றஞ்சாட்டப் பட்டது.

இவ்வாறு மூன்று முறை $900,000 மதிப்புள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற் றத்தை மாணிக்கம் ஒப்புக்கொண் டார்.

அதற்காக மாணிக்கத்துக்கு நேற்று ஈராண்டு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது. எஞ்சியுள்ள பணம் தொடர் பான மேலும் இரு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப் பின் கருத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டன.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் திட்டத்தின்படி, சிங்கப்பூர் நிறு வனம் ஒன்று பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நடத்துநரிடம் திறன் பயிற்சிக்குத் தனது ஊழியர் ஒரு வரை அனுப்பும்போது, ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் மானியத்துக்கு விண்ணப்பிக்க லாம்.

பயிற்சி நடத்துநருக்கு நிறுவ னம் செலுத்திய பயிற்சிக் கட்ட ணத்திலிருந்து ஒரு பகுதி மானி யமாக வழங்கப்படும்.

இவ்வாறு இந்த மோசடியில் ஈடுபடுத்த மோசடி கும்பல் சிங்கப் பூரில் பதிவு செய்யப்பட்ட ஒன்பது நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தது.

இந்த ஒன்பது நிறுவனங்களும் மொத்தம் 8,386 போலியான பயிற்சி விண்ணப்பங்களையும் 8,391 போலியான பயிற்சிக் கட் டண மானியங்களுக்கும் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விண்ணப்பங்களையும் சமர்ப்பித் தன.

இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இந்த மோசடி நிறுவனங்களுக்கு $39.9 மில்லி யனை வழங்கியது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஐவன் சுவா கூறினார்.