பொருளியல் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ஓங் புதுடெல்லி பயணம்

பொருளியல் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ஓங் புதுடெல்லி பயணம்

1 mins read

'குரோத் நெட் சம்மிட்' எனும் பொருளியல் மாநாட்டில் பங்கேற்று, உரையாற்ற கல்வி அமைச்சர் ஓங் யி காங் இன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லி சென்றுள்ளார். இன்று முதல் 7ஆம் தேதி வரை அவர் அங்கிருப்பார். அந்த மாநாட்டில் திரு ஓங், அரசியல், அரசாங்க, வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பார்.

அனந்தா நிலையம், ஸ்மாட்ஜா அண்ட் ஸ்மாட்ஜா நிறு வனம், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்திய நிதி அமைச்சும் இந்நிகழ்ச்சியின் முக்கிய பங்காளி.

2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த வருடாந்திர மாநாட்டில் வளரும் நாடுகளிலிருந்து முக்கியமான அரசியல், அரசாங்க, வர்த்தகப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, பொதுவான சவால்களுக்கான புத்தாக்க அணுகுமுறைகள் பற்றி விவா திப்பார்கள். இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் பங்கேற் றோர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர் கள் எஸ். ஈஸ்வரன், லாரன்ஸ் வோங் ஆகியோர்.

அமைச்சர் ஓங்குடன் கல்வி அமைச்சு, ஸ்கில்ஸ்ஃ பியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, தொழில்நுட்பக் கல்விக் கழக சேவைகள், நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரி இன்டர் நேஷனல் ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்கின்றனர்.