‘பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்’

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் வேளை யில், ஆசியான் நாடுகள் தங்களுக் கிடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்திக்கொண்டு, பொது வான தளங்களில் ஒன்றிணைந்து பணியாற்றி, புதிய மின்னிலக்க வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித் துள்ளார்.

ஆசியான் நாடுகள் தாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வகை செய்யும் வெளிப்படையான விதி முறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு சான், நேற்று நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கூறினார்.

இந்த வட்டாரத்தில் உள்ள மேம்பாடுகள் பற்றியும் வர்த்தக மனப்போக்கு பற்றியும் அறிந்து கொள்ளும் தளமாக விளங்கும் ஆசியான் மாநாட்டில், சிங்கப்பூர் மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் பங்கேற்ற னர்.

“பணம் செலுத்தும் முறைகள், அறிவார்ந்த சொத்தின் பாதுகாப்பு போன்ற பொதுவான அம்சங்களில் ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து

நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத் தின் தலைவர் திரு டியோ சியோங் செங், “வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும் பும் சம்மேளனத்தின் உறுப்பினர் களில் 80 விழுக்காட்டினர் ஆசியா னில் தங்கள் விரிவாக்கத்தை வைத்துக்கொள்ள விரும்புகின்ற னர்,” என்றார்.

அதன் காரணத்தால், சம்மேளனம் சந்தை சார்புடைய வர்த்தக கட்டமைப்புகளை வியட்னாம், இந் தோனீசியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் தொடங்க திட்டமிட்டுள்ளது. பின்னர் அது இதர ஆசியான் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் திரு டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!