ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், 1990ல் திரு லீ குவான் இயூவிடம் இருந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் திரு லீயை அமைச்சரவையிலேயே மூத்த அமைச்சராக தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்தார்.
தனக்கும் திரு லீக்கும் இடையில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை அமைச்சரவைக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளமுடியும் என்பதால் திரு கோ அந்த முடிவை எடுத்தார்.
திரு கோ, தன்னுடைய சுயசரிதையைப் புத்தகமாக எழுதி இருக்கிறார். அதன் சீன மொழியாக்கம் 'அரிய சாதனை: கோ சோக் டோங் வரலாறு' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. கேப்பிட்டல் பியாசா வில் நடந்த அந்த நிகழ்ச்சியின் கலந்துரை யாடலில் திரு கோ கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு கோ, "திரு லீ குவான் இயூவை பற்றி உங்களுக்குத் தெரியும். ஏதாவது தவறு நடந்துவிட்டால் கல்லறையில் இருந்துகூட அவர் எழுந்து வந்துவிடுவார். பிரதமர் என்ற முறையில் நான் ஏதாவது தவறு செய்தால் அதைப் பற்றி அவர் பகிரங்கமாக வெளியே தெரி வித்துவிடுவார்.
"எங்களுக்கு இடையில் பிரச்சினை இருப்பதாக மக்கள் நினைத்தால் அதனால் சிங்கப்பூர் பிளவுபட்டுவிடும். அவ்வப் போது எங்களுக்குள் கருத்து வேறுபாடு கள் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்.
"ஆகையால் திரு லீயை அமைச்சரவை யிலேயே வைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும் என்று நான் முடிவு செய்தேன்," என்றார் திரு கோ. பிரதமர் பதவியை 2004ல் திரு லீ சியன் லூங்கிடம் ஒப்படைத்த பிறகு திரு கோவும் மூத்த அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
"சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஹெங் சுவீ கியட் பொறுப்பு ஏற்றதும் இப்போதைய பிரதமர் திரு லீ மூத்த அமைச்சர் பொறுப்பை ஏற்பாரா என்பது அவர்களுக்கு இடைப்பட்டது என்று தெரி வித்த திரு கோ, இருந்தாலும் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் திரு லீ தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து வருவார் என்று தான் நம்புவதாகத் தெரி வித்தார்.
இதன் மூலம் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் பிரதமர் திரு லீயின் பல ஆண்டு கால அனுபவத்திலிருந்து பலவற் றையும் கற்றுக்கொள்ள முடியும்.
திரு லீயை அமைச்சரவையில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் விவேகமிக்கவர் என்று தான் நம்புவதாக வும் திரு கோ குறிப்பிட்டுள்ளார்.

