எச்ஐவி தகவல் கசிவு: புரோச்செஸ் குற்றவாளி என நடுவர் குழு தீர்ப்பு

எச்ஐவி தகவல் கசிவு: புரோச்செஸ் குற்றவாளி என நடுவர் குழு தீர்ப்பு

2 mins read
0d87f235-598b-41b0-b126-d79d24ee222f
நீதிமன்றத்தில் முன்னிலையான அமெரிக்கர் புரோச்செஸ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இருந்து திருடப்பட்ட எச்ஐவி தகவல்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் மிக்கி ஃபரேரா புரோச்செஸ் என்ற அமெரிக்கர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் கெண்டக்கி மாநில நடுவர் குழு, ஒன்றரை நாள் நடந்த விசாரணை முடிவில் அந்த ஆடவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக அந்த அமெரிக்கருக்கு 18 மாதம் முதல் 24 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக புரோச்செசின் வழக் கறிஞர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

புரோச்செஸ், இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியும் பிப்ரவரி 18ஆம் தேதியும் சிங்கப்பூர் அர சாங்கத்திற்கு இரண்டு மின் னஞ்சல்களை அனுப்பினார்.

சிறையில் இருக்கும் தன் 'கணவர்' விடுதலை செய்யப்பட வில்லை என்றால், தனது இதர கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் தன் வசம் உள்ள சிங்கப்பூர் எச்ஐவி பதி வேட்டை மேலும் அம்பலப்படுத்தப் போவதாக அந்த அமெரிக்கர் தன் மின்னஞ்சல்களில் சிங்கப்பூர் அர சாங்கத்தை மிரட்டி இருந்தார்.

சிங்கப்பூருக்குச் சொந்தமான எச்ஐவி தகவல்களைத் தெரிந்தே, சட்டவிரோதமாக, சட்டத்தை மீறும் நோக்கத்துடன் அவர் வைத்திருந் தார். அந்தத் தகவல்களில் 14,000 பேருக்கும் மேற்பட்டோரின் சொந்த விவரங்கள் அடங்கி இருந்தன.

அந்த அமெரிக்கர் இந்தக் குற்றங்களைச் செய்ததாக நடுவர் குழு தன் தீர்ப்பில் குறிப்பிட்டது.

விசாரணையில் புரோச்செஸ் தரப்பில் முன்னிலையான வழக் கறிஞர்கள் முன்வைத்த வாதத்தை அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறி ஞர்கள் ஏற்கவில்லை.

அமெரிக்க நீதிமன்றத்தில் புரோச்செஸ் தெரிவித்த வாக்கு மூலங்களுக்கும் சிங்கப்பூர் அதி காரிகளிடம் அவர் தெரிவித்த வாக்குமூலங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக் கறிஞர்கள் கூறினர்.

தீர்ப்பு அளிக்கப்பட்டபோது அது பற்றி புரோச்செஸ் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். செப்டம் பர் 27ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் புரோச்செசுக்கு அதிகபட்ச மாக மொத்தம் ஒன்பது ஆண்டு வரைப்பட்ட சிறைத்தண்டனை விதிக்க முடியும். அதோடு US$750,000 (S$1.023 மில்லியன்) அபராதமும் விதிக்க இடமுண்டு.

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு கெண்டக்கியில் அந்த அமெரிக் கருக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடுத்து இருக்கிறது. சிங் கப்பூரில் இருந்து திருடி வைத் திருக்கும் எச்ஐவி பதிவேட்டுத் தகவல்களை அழித்துவிடும்படியும் அவற்றை சிங்கப்பூரிடமே திரும்ப ஒப்படைக்கும்படியும் புரோச்செ சுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண் டும் என்று சிங்கப்பூர் அமைச்சு வழக்குத் தொடுத்து உள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த எச்ஐவி பதிவகத் தகவல்கள் வெளியான விவகாரத்தில் 38 வயது லெர் டெக் சியாங் என்ற சிங்கப்பூர் மருத்துவர் ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இவர், அமெரிக்காவில் இப் போது குற்றவாளி என்று தீர்ப்பளிக் கப்பட்டு இருக்கும் நபரின் காதலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.