நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தம் அரண்மனையில் அளித்த பொது வரவேற்பு விருந்தில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் அவர்களின் மனைவியருடன் கலந்து கொண்டு ஜோகூர் சுல்தானைச் சந்தித்ததாக வெளியுறவு அமைச்சு கூறியது.
ஆண்டுதோறும் தொடரும் வழமையையொட்டி சிங்கப்பூர் தலைவர்களின் வருகை இடம்பெற்றதாகவும் ஜோகூர் சுல்தான் அளித்த விருந்து சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் நிலவும் அருமையான உறவைப் பிரதிபலிப்பதாகவும் வெளிறவு அமைச்சு தெரிவித்தது.

