ஆடவர் ஒருவர் பாலியல் தொடர்பான மோசடி வலையில் விழுந்துவிட்டார். அதனால் அவருக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது. அந்த இழப்பை மூடி மறைப்பதற்காக அவர் போலிசிடம் பொய்ப் புகார் தெரிவித்தார். அந்த 20 வயது ஆடவர் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த புகார் குறித்து புலன்விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.
இன்னாரென்று தெரியாத ஒருவரிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தன் பெற்றோரை அந்த நபர் கடத்திவிட்டதாகவும் அந்த நபர் போலிசிடம் கூறினார். புலன்விசாரணைபோது போலிஸ் அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்தது.
அந்த 20 வயது ஆடவர், அழகான ஒரு மாதின் பாலியல் ஆசை வலையில் விழுந்து பணத்தை இழந்து அந்த மாதைச் சந்திக்க முடியாமல் ஏமாந்து இருக்கிறார் என்பதும் அது தன் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்பதை உணர்ந்த அந்த நபர், போலிசிடம் தன் பெற்றோர் கடத்தப்பட்டதாக பொய்ப் புகார் தெரிவித்தார் என்றும் போலிஸ் ஓர் அறிக்கையில் கூறியது.
போலிசிடம் பொய்ப் புகார் தெரிவிப்போருக்கு ஓராண்டு வரை சிறை அல்லது $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

