கடன்முதலை விவகாரம்: ஆடவர் கைது

கடன்முதலை விவகாரம்: ஆடவர் கைது

1 mins read

கடன்முதலை அலைக்கழிப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பதின்ம வயது ஆடவர் கைதாகி இருக்கிறார். அங் மோ கியோ குடியிருப்புப் பேட்டையில் இரண்டு கடன்முதலை அலைக்கழிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக 2019 மே 30 ஆம் தேதிக்கும் 2019 ஜூன் 1ஆம் தேதிக்கும் இடையில் போலிசுக்குத் தகவல் கிடைத்தது.

படச்சாதனங்களின் உதவியோடு புலன்விசாரணை நடத்திய அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் 2019 ஜூன் 4ஆம் தேதி சந்தேகநபரை கைது செய்தனர். புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்தது.