ஓஃபோ மற்றும் ஓபைக் ஆகிய இரண்டு வாடகை சைக்கிள் நிறுவனங்களைச் சேர்ந்த 10,000 சைக்கிள்கள் மியன்மாரில் உதவி தேவைப்படும் ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட இருக்கின்றன.
மியன்மாரில் செயல்படும் 'லெஸ்வாக்' என்ற லாப நோக்கற்ற நிறுவனம் அந்தச் சைக்கிள்களை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியது. அவற்றை இம்மாத முடிவில் மாணவர் களுக்கு அந்நிறுவனம் கொடுக்கும். லெஸ்வாக்கை நிறுவியவர் மைக் தான் துன் வின், 33, என்பவர். சிங்கப் பூரில் ஒரு மாணவராக ஏறக்குறைய 18 ஆண்டு காலம் தங்கியிருந்த இவர், இப்போது மியன்மாரில் வசிக்கிறார்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஓஃபோ மற்றும் ஓபைக் நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டதை அடுத்து அவற்றிடம் இருந்த சைக்கிள்கள் மூன்றாம் தரப்புகளின் கைகளுக்கு மாறின. அவற்றிடமிருந்து அந்தச் சைக்கிள் களை லெஸ்வாக் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

