நோன்புப் பெருநாளான நேற்று ரெட்ஹில் காப்பிக்கடை ஒன்றில் தீ மூண்டது. இதனால் அங்கு அமர்ந்திருந்த வாடிக்கையாளர் கள் உடனே அவ்விடத்தை விட் டுச் செல்ல வேண்டியிருந்தது.
தீச்சம்பவம் குறித்து பிற்பகல் நான்கு மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது. 75'D' ரெட்ஹில் சாலையில் அமைந்துள்ள காப்பிக்கடையின் காற்றோட்டக் குழாயில் ஏற்பட்ட தீயை வீரர்கள் கூரைமீது ஏறி அணைத்தனர்.
கூரைப்பகுதியில் அமைந்து உள்ள குழாயிலிருந்து குபுகுபு என புகை வெளியேறுவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.

