இலவச 5ஜி சேவை உரிமங்கள் வழங்க சிங்டெல் கோரிக்கை

இலவச 5ஜி சேவை உரிமங்கள் வழங்க சிங்டெல் கோரிக்கை

1 mins read

நாட்டில் இரண்டு 5ஜி கையடக்கச் சாதன கட்டமைப்பு உரிமங்களைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இலவசமாக வழங்குமாறு சிங்டெல் நிறுவனம் கோரி உள்ளது. அவ்வாறு செய்வதால் புதிய 5ஜி சேவையை உருவாக் கத் தேவைப்படும் முதலீட்டை ஒரு கணிசமான அளவு குறைக் கலாம் என்று சிங்டெல் தெரிவித்துள்ளது.

ஆணையம் 5ஜி சேவைகளை இரண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றால் அந்தக் கட்டமைப்புகளை நிர்வகித்து நடத்துவதற்கான உரிமைகளைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் தன்னிடத்தில் இருப்பதாக சிங்டெல் குறிப்பிட்டது. சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடளாவிய 5ஜி கட்டமைப்புகள் இரண்டு நடப்புக்கு வரும்.