ஜூரோங் ஈஸ்டில் கார் விபத்து; ஆடவர் பலி

ஜூரோங் ஈஸ்டில் கார் விபத்து; ஆடவர் பலி

1 mins read
3d98ef15-5f11-4960-a04c-4c91e4ccbb08
-

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் கார் மோதி 62 வயது ஆடவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்திருக்கிறார். ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ ஒன்றில் இந்த விபத்து புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு ஏற்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

சுயநினைவு இழந்த நிலையில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ஆடவர் பின்னர் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட 56 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாக போலிசார் கூறுகின்றனர்.­­­