ஆய்வு: காருக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவி ஓட்டுநரைப் பாதுகாக்கும்

ஆய்வு: காருக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவி ஓட்டுநரைப் பாதுகாக்கும்

2 mins read
15bc5f0a-8f93-4304-97c1-58a591a02c98
உள்புறத்தில் படம் எடுக்கும் ஒளிப்பதிவுக் கருவிகள் டாக்சிக்குள் பொருத்தப்படுவது, முறைகேடான பயணிகள், கட்டணம் கொடுக்காத பயணிகள் ஆகியோரிடமிருந்து பாதுகாக்கும் என்று தேசிய டாக்சி சங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாகனங்களில் உட்புறத்தில் படம் எடுக்கும் ஒளிப்பதிவுக் கருவிகள் வாகன ஓட்டுநர் மற்றும் பயணி களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று 10 பேரில் ஒன்பது பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார் கள்.

டாக்சிகள், தனியார் வாடகை கார்கள், ஓட்டுநருடன் கூடிய ஆடம்பர கார்கள் ஆகியவற்றில் அத்தகைய ஒளிப்பதிவுக் கருவி கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று 10 பேரில் ஆறு பேர் கூறு கிறார்கள் என ஓர் ஆய்வு தெரி விக்கிறது.

வாகனத்தின் உள்ளே நடப்பன வற்றைப் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுகளையும் கொண்டி ருக்க வேண்டும் என்று 10ல் ஒன் பது பேர் விரும்புகிறார்கள்.

தவறு நடக்கும்போது அம லாக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

'ரீச்' எனப்படும் அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவு, இணையம் மூலமாக 1,000 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளை உள்ள டக்கி அந்த ஆய்வை நடத்தியது.

கடந்த மார்ச் மாதம் நடத்தப் பட்ட அந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண் டார்கள்.

வாகனங்களில் உட்புறங்க

ளைக் காணொளிப் படம் எடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றி பொதுமக்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆய்வு நடத்தப் பட்டது.

டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் ஆடம்பரக் கார்களிலும் பொருத்தக்கூடிய, பயன்படுத்தக்கூடிய அத்தகைய சாதனங்கள் தொடர்பான நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறாத வகையில் அத்தகைய சாதனங் களை வாகனங்களில் பொருத்த லாம்.

டாக்சிகளில் மூர்க்கமாக நடந்துகொள்ளும் பயணிகள், கட் டணத்தைச் செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கும் பயணிகள் ஆகி யோரைச் சமாளிக்க இத்தகைய ஒளிப்பதிவுக் கருவிகளைப் பயன் படுத்த அனுமதி வேண்டும் என்று 2015 முதலே தேசிய டாக்சி சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இத்தகைய சாதனங்கள் செயல் படுவதை விரும்பாத பயணிகள், அவற்றைப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பிரத்தியேக தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவிக்கிறது.

பிரத்தியேக தகவல் பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்டு போக்குவரத் துச் சேவை நிறுவனங்களும் வாகன ஓட்டுநர்களும் நடந்து கொள்ள வேண்டும். வாடிக்கையா ளர்களின் பிரத்தியேக தகவல் களைப் பாதுகாப்பதற்குப் போதிய அளவுக்கு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கமுடியும்.

இதனிடையே, இந்த ஆய்வு முடிவு பற்றி கருத்துரைத்த போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச் சேரி, நிலப் போக்குவரத்து ஆணையம் விதிமுறைகளை மறு பரிசீலனை செய்யும்போது இந்த ஆய்வு முடிவுகளை ஆணையம் கருத்தில்கொள்ளும் என்று தமது ஃபேஸ்புக்கில் நேற்றுத் தெரிவித்தார்.