அரசாங்கம் இந்த ஆண்டின் பிற் பாதிக்கான நில விற்பனை செயல் திட்டத்தில் இடம்பெறும் உறுதிப் படுத்தப்பட்ட பட்டியலில் தனியார் வீடுகளுக்கான நிலப் பகுதிகளைக் குறைத்து இருக்கிறது.
வீட்டு விலைகளை மட்டுப்படுத் துவதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியது.
அவற்றின் காரணமாக தனியார் வீடுகளுக்கான தேவை குறைந்து இருக்கிறது. அதோடு மட்டுமின்றி அதிகமான வீட்டு கட்டுமானத் திட்டங்களும் நடப்பில் இருந்து வருகின்றன.
இவற்றின் காரணமாக தனியார் வீடுகளைக் கட்ட கொடுக்கப்படும் நிலப்பகுதியின் அளவை அரசாங் கம் குறைத்து இருக்கிறது.
உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள ஐந்து இடங்களிலும் ஒதுக் கப்பட்டு இருக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள எட்டு நிலப் பகுதி களிலும் சுமார் 6,430 தனியார் வீடுகளைக் கட்ட முடியும்.
92,000 சதுர மீட்டர் மொத்த பரப்பளவு உள்ள வர்த்தக இடமும் 1,100 ஹோட்டல் அறைகளும் அந்த இடங்களில் உருவாக முடி யும்.
இந்த இடங்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று அறிவித்தது.
தனியார் வீடுகளைக் கட்டுவ தற்கான உறுதிப்படுத்தப்பட்ட நிலப் பட்டியலில் உள்ள இடங் களில் 1,715 வீடுகளைக் கட்ட முடியும்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 2,025 வீடுகளைக் கட்டுவதற்கான நிலப்பகுதி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்று இருந்தது.
இதைக் கணக்கிட்டு பார்க் கையில் இரண்டாவது பாதிக்கு 15% இடம் குறைக்கப்பட்டு இருக் கிறது.
சிங்கப்பூரில் சொத்துச் சந் தையை மட்டுப்படுத்துவதற்காக சென்ற ஆண்டு ஜூலையில் பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அது முதல் தனியார் வீடுகளுக்கான தேவை குறைந்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்து 3வது காலாண்டாக கைமாறிய வீடு களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
அதோடு மட்டுமின்றி வீடு களைக் கட்டி விற்பவர்கள் நிலம் வேண்டும் என்று கேட்டு விடுக் கப்படும் விண்ணப்பங்களும் மித மான அளவில் இருக்கின்றன.
இவற்றோடு சுமார் 44,000 தனியார் வீடுகளைக் கட்டுவதற் கான திட்டங்களும் உள்ளன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போது சுமார் 24,000 தனியார் வீடுகள் காலியாக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

