கழிவுப்பொருட்களை வெப்ப சக்தி யாகவும் தாவரங்களின் வளர்ச் சிக்கு உதவும் உரமாகவும் மாற்றக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தை கரையோரப் பூந்தோட்டங்கள் கைகொண்டு உள்ளது.
இதனால் அறவே விரயமில்லாத சாதனையை நிகழ்த்தும் இலக்கை நோக்கி கரையோரப் பூந்தோட்டங் கள் மேலும் முன்னேறி உள்ளது.
சிங்கப்பூரின் எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான 'எஸ்பி குரூப்', 6 மீட்டர் நீளமுள்ள சிறு ஆலை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அந்த ஆலை, உணவுக் கழிவு களையும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொது கழிவுப்பொருட்களையும் 650 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வெப்பசக்தியாக மாற்றிவிடும்.
அந்தச் சக்தியைக் கொண்டு பெரும் தொட்டியில் உள்ள தண் ணீரைச் சூடாக்கிவிடலாம்.
அந்தத் தண்ணீரைக் கரை யோரப் பூந்தோட்டங்களில் உள்ள உணவு, பான நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன. அந்தச் சிறு ஆலையில் நிகழக்கூடிய வேதி மாற்றங்களின் விளைவாக கரிம வீழ்படிவுகள் உருவாகும். இவை மரக்கரியைப் போலவே இருக்கும்.
அந்தக் கரியை உரமாகப் பயன் படுத்த முடியுமா என்பதைக் கண் டறிய ஆய்வுகள் நடக்க இருக்கின் றன. இந்தப் புதிய ஆலையில் குப்பைக்கூளங்கள் எரிக்கப்படுவ தில்லை என்பதாலும் கரிமப் பொருட்கள் சிறு அளவுக்கு வீழ் படிவாகத் தங்கிவிடும் என்பதா லும் இந்த முறை மூலம் ஏற்படக் கூடிய கரிமவாயு ஆபத்துகள் 20% குறைகின்றன என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

