சிங்கப்பூரில் செமாகாவ் தீவு மட் டுமே குப்பை கொட்டும் இடமாக இருக்கிறது. 2035 ஆம் ஆண்டு வாக்கில் அந்தத் தீவிலும் இடம் இருக்காது. குப்பைக்கூளங்களைக் குவிக்க இடமில்லாத நிலை ஏற் பட்டுவிடும்.
இந்த நெருக்கடியைச் சமாளிப் பதற்காக சிங்கப்பூரின் அறிவியல் வல்லுநர்கள் நாட்டில் எரிக்கப் படும் குப்பைக்கூளங்களை கட்டு மானத் துறைகளிலும் மோட்டார் வாகனத் துறைகளிலும் விவேக மாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைக் காண முயன்று வருகிறார்கள்.
இப்படி எரிக்கப்படும் சாம்பலை கட்டுமானத் துறையில் மணல், கற்களுக்குப் பதிலாக பயன்படுத் திக்கொள்வது புதிதல்ல என்றா லும் இத்தகைய ஒரு நடைமுறை சிங்கப்பூரில் நடப்பில் இல்லை.
குப்பைக்கூளங்கள் எரிக்கப் பட்டு பெறப்படும் சாம்பலில் நச்சுத் தன்மை வாய்ந்த கடின உலோ கங்கள் கலந்திருக்கும் என்பதே இதற்கான காரணம். அத்தகைய உலோகங்கள் சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடும். இருந்தாலும் இப்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஆய் வுக் குழு, வெற்றிகரமான முறை யில் GGBS-OPC என்ற வேதிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளது.
அந்த வேதிப்பொருள் ஈயம், ஆர்சனிக் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கடின உலோகங்களை வீழ்படிவாக (வண்டல்) மாற்றி விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

