சிங்கப்பூர்: ஊழல் ஒழிப்பில் ஒரு காசு லஞ்சம் என்றாலும் சகித்துக்கொள்ளாத அணுகுமுறை

உலகில் ஊழல் மிகமிகக் குறைந்த நாடு களில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது. இதற்கு சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு (CPIB) மிக முக்கிய காரணமாகத் திகழ்கிறது.ஊழலைப் பொறுத்தவரையில் அமைச் சர்களாக, தொழில்துறையாளர்களாக, பாரந்தூக்கி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் என எவராக இருந்தாலும் இந்தப் பிரிவு யாரையும் விட்டுவைப்ப தில்லை.

இப்பிரிவின் புலன்விசாரணை நடவடிக் கைகள் துறையின் துணை இயக்குநர் சின் வீ லியாம், இதர மூத்த அதிகாரிகளு டன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளுக்குப் பேட்டியளித்தார்.

அதில், சிங்கப்பூர் ஊழல் மிகக் குறைந்த நாடாக தொடர்ந்து இருந்து வருவதற்கான காரணங்களை அவர் விளக்கினார்.

ஊழல் என்பது பெரும் தொகைகளை உள்ளடக்கிய விவகாரமாகவே அடிக்கடி பார்க்கப்படுகிறது. இருந்தாலும் 10 காசைக்கூட லஞ்சமாக யாராவது பெற் றால் அதையும் இந்தத் துறை விட்டு விடாது என்று 30 ஆண்டு காலம் அனு பவம் வாய்ந்த திரு சின் கூறினார்.

கொள்கலன்களில் இருந்த பொருட் களைக் கீழே இறக்க அல்லது கீழே இருந்த பொருட்களைக் கொள்கலனில் ஏற்ற வரிசைக்குப் புறம்பாக தங்களுக்குச் சலுகை காட்டும்படி கேட்டவர்களிடம் பாரந்தூக்கி வாகனத்தை ஓட்டும் ஒருவர் 10 காசு முதல் $1 வெள்ளி வரை லஞ்சம் பெற்றார். இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு நிகழ்ந்ததாக திரு சின் நினைவுகூர்ந்தார்.

லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற ஒரு நிலவரம் ஏற்பட்டுவிட் டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்ட திரு சின், ஊழலற்ற நாடு என்ற சிங்கப்பூரின் கலாசாரத்தை நிலை நாட்டி வருவதே நோக்கம் என்றார்.

இத்தகைய ஒரு கலாசாரம் இருந்தால் 10 காசு, 5 காசு லஞ்சம் கூட வாழ்க்கை முறையாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் காலனித்துவ ஆட்சியின்கீழ் இருந்தபோது ஊழல் தலைவிரித்தாடியது. 1937ல் ஊழல் ஒழிப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது. 1952ல் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப் பெடுத்தது. 1960ல் ஊழல் தடை சட்டம் நடப்புக்கு வந்தது.

சென்ற ஆண்டு தன்னிடம் ஊழல் தொடர்பான 358 புகார்கள் தெரிவிக்கப் பட்டதாக ஏப்ரலில் இந்தப் பிரிவு அறி வித்தது. அவற்றில் 107 புகார்கள் புலன் விசாரணைக்காகப் பதியப்பட்டன.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட AEM-Evertech Holdings என்ற நிறு வனத்தின் மூத்த நிர்வாகிகள் தொழில் அனுகூலங்களுக்காக லஞ்சம் கொடுத்த விவகாரம் ஒன்றைப் பற்றி திரு சின் விளக்கினார். குற்றவாளிகளுக்கு அபராத மும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தீர்ப்பு, பொதுத் துறை, அரசாங்கத் துறை எதிலும் இடம்பெறக் கூடிய ஊழல் எதுவும் சரிசம அணுகுமுறை யுடன் கையாளப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது என்று குறிப் பிட்ட திரு சின், தனியார் துறையில் ஊழல் இடம்பெற்றால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்ற தப்பெண்ணத்தை அந்தத் தீர்ப்பு மாற்றியதாகவும் கூறினார்.

“சிங்கப்பூர் கலாசாரத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது பெருமையாக இருக்கிறது. இதைக் கட்டிக் காப்பதற்கான முயற்சிகளைக் குறைத்து விடக்கூடாது,” என்றார் திரு சின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!