பெண்ணைத் தாக்கியதாக வழக்கறிஞர் சாமுவெல் சியாவ் மீது குற்றச்சாட்டு

பெண்ணைத் தாக்கியதாக வழக்கறிஞர் சாமுவெல் சியாவ் மீது குற்றச்சாட்டு

1 mins read
0be62164-0b24-4fd7-a4e3-3979ed4d7fc6
-

பெண் ஒருவரைத் தாக்கியதாகவும் மேலும் இருவர் மீது வன்முறையாக நடந்துகொண்டதாகவும் கேளிக்கைத்துறை வழக்கறிஞர் சாமுவெல் சியாவ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி சியாவ், சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள தமது அலுவலகத்தில் குமாரி பிரெண்டா கோங் ஷின் யிங்கின் கைகளைப் பிடித்துக்கொண்டு மேஜையில் தள்ளி அவரது கன்னத்தைப் பலமுறை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

46 வயது சியாவ் இரண்டு பெண்கள் மீது வன்முறையாக நடந்துகொண்டதாகவும் அவர்களில் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். ஒரு பெண்ணை அவர் நெற்றியில் விரலால் குத்தியதாகவும் மற்றொரு பெண்ணைக் கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 5ஆம் தேதி அவரது வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். மற்றொருவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஈரண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.