நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்குபெறும் ஜி20 மாநாடு இன்று ஜப்பானில் தொடங்குகிறது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் நிதி இரண்டாவது அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொள்கிறார். ஜப்பான் இரண்டாவது முறையாக ஜி-20 மாநாட்டைத் தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாட்டில் உலகப்பொருளியல் மேம்பாடுகள் பற்றியும் நிதித்துறை வளர்ச்சி குறித்த விவகாரங்களும் அலசி ஆராயப்படும்.
அத்துடன் தேசிய அளவில் மக்கள் தொகையால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
அமைச்சர் வோங்குடன் நிதி அமைச்சு மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரிகளும் உடன்செல்வர்.

