தீவிர பராமரிப்பு மற்றும் குழந்தை நல மருந்தியல் ஆகிய இரண்டு புதிய மருந்தியல் நிபுணத்துவ துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
இந்த உயர் ஆற்றலுடைய மருந்தியல் நிபுணர்கள் தங்கள் துறைகளின் ஆராய்ச்சிக்கும் பங்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இவற்றைத் தவிர 2012ஆம் ஆண்டில் இருந்து ஐந்து நிபுணத்துவ துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பணியில் உள்ள மருந்தாளர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் இப்புதிய துறைகளில் தங்களின் ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.
நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் மருந்தியல் மன்றத்தின் மருந்தாளர்கள் உறுதிமொழி சடங்கில் சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
"எதிர்கால சுகாதார பராமரிப்புத் தேவைகளுக்கு ஈடுகட்டும் வகையில் மருந்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சார் கான்.

