வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

2 mins read

பெண் ஒருவரைத் தாக்கியதாக வும் வேறு இருவர் மீது வன் முறையைக் கையாண்டதாகவும் வழக்கறிஞர் சேமுவல் சியாவ் தெங் பெங், 46, மீது நீதிமன் றத்தில் நேற்று குற்றம் சுமத்தப் பட்டது.

திருவாட்டி கோங் ‌ஷின் யிங் என்பவரின் கைகளைப் பிடித்து, மேசை மீது அவரைத் தள்ளிய சியாவ், அவரின் இடது கன்னத் தில் பலமுறை அறைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சௌத் பிரிட்ஜ் சாலையில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப் பட்டது.

அதோடு, திருவாட்டி ரேச்சல் காங் பெய் ஷான் என்பவரின் நெற்றியில் சியாவ் வேண்டும் என்றே தனது விரலால் குத்தி யதாகவும் திருவாட்டி செரீன் டான் ஸ` யென் என்பவரைக் கீழே தள்ளிவிட்டதாகவும் சொல் லப்பட்டது.

சென்ற ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த இன்னொரு சம்ப வத்தில் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதாக திருவாட்டி கோங்கை அவர் மிரட்டியதா கவும் கூறப்பட்டது.

சியாவுக்கும் அம்மூன்று பெண்களுக்கும் என்ன உறவு என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. ஆயினும், திருவாட்டி கோங் தம்முடைய உறவினர் என சியாவ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் சியாவுக்கும் பெண் ஒருவருக்கும் இடை யிலான பேச்சு அடங்கிய ஒலிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி, பரவலாகப் பகிரப்பட் டதை அடுத்து சியாவின் பெயர் செய்திகளில் இடம்பெற்றது.

சியாவ் தம்மைப் பிடித்து தள்ளிவிட்டதாக பெண் ஒருவர் போலிசில் புகார் அளித்தார். பிறகு கடந்த ஆண்டு மே மாதம் அவர் அந்தப் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதை அடுத்து, சியாவும் அன்றே தனது புகாரைத் திரும்பப் பெற்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சியாவ், அது தங்களது குடும்ப விவகாரம் என்றும் தான் ஒரு முதலாளியாக இல்லாமல், உறவினராக நடந்துகொண்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அலுவலகத்தில் சியாவுக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டை தொடர் பான இரு காணொளிகள் இந்த ஆண்டில் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட, அவை தீயாகப் பரவின.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி போலிசில் புகார் அளித்தார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக் கில் பலர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அறிக்கை மூலம் அவர் குற்றம் சாட்டினார்.

சியாவ் மீதான வழக்கு ஜூலை 5ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்ட னையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.