சட்டவிரோத மாத்திரைகள் பறிமுதல்

சட்டவிரோத மாத்திரைகள் பறிமுதல்

1 mins read

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1,520 சட்டவிரோத மாத்திரை அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் பதிவெண் கொண்ட காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரினுள் 27 மற்றும் 40 வயது நிரம்பிய சிங்கப்பூர் ஆடவர் இருவர் இருந்தனர்.

சோதனையில் காரின் பின்கதவில் சட்டவிரோத மருந்துகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஒவ்வோர் அட்டையிலும் 10 முதல் 14 மாத்திரைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சுகாதார அறிவியல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது.