காலாங் ஆற்றின் வரலாறு கூறும் புதிய புத்தகம்

காலாங் ஆற்றின் வரலாறு கூறும் புதிய புத்தகம்

1 mins read
e07f5a48-cd41-4aa2-8779-df9ec2bad94d
தேசிய நூலகத்தில் காலாங் ஆற்று வரலாற்றின் முக்கிய அம்சங்களைக் காட்டும் கண்காட்சியை ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கொளம் ஆயர் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்      -

காலாங் ஆற்றின் செழுமையான வரலாற்றைக் கூறும் புதிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டு இருக் கிறது.

"காலாங் ஆறு அருகே நம் இல்லம்-கடந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம்" என்ற அந் தப் புத்தகத்தை தேசிய நூலகத் தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவையொட்டி கொளம் ஆயர் குடிமக்கள் ஆலோசனைக் குழு வெளியிட்டது.

ஜாலான் புசார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

காலாங் ஆறு பல ஆண்டு கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஆற்றின் நெடுகே ஆலயங்களும் வழிபாட்டு இடங் களும், புதிய, பழைய கட்டடங் களும் இடம்பெற்று இருப்பதைச் சுட்டினார். ஆற்றின் நெடுகிலும் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

காலாங் ஆற்றின் வரலாற்றின் முக்கிய அம்சங்களைக் காட்டும் கண்காட்சி ஒன்றும் நேற்று நூல கத்தில் திறந்துவைக்கப்பட்டது.