சீக்கியர் மரபுடைமை தினத்தில் கலாசாரம் காட்டும் கண்காட்சி

சீக்கியர் மரபுடைமை தினத்தில் கலாசாரம் காட்டும் கண்காட்சி

1 mins read
b600e9df-3d8f-4def-b14a-b641300876b3
தேசிய சுகாதார பராமரிப்புக் குழுமத்தில் ஆக அதிக காலம் ஆண் தாதியாகப் பணியாற்றி வரும் திரு ஹர்பஜன் சிங், 2003ல் சிங்கப்பூரில் சார்ஸ் நோய் தொற்றியபோது பாராட்டத்தக்க சேவையாற்றியவர். இவருடைய கதையும் கண்காட்சியில் இடம்பெற்று இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

சிங்கப்பூரில் முதலாவது சீக்கிய மரபுடைமை தினத்தைக் கொண் டாடும் வகையில் இரண்டு நாள் கண்காட்சி ஒன்று நடக்கிறது. 'அவர் தெம்பனிஸ் ஹப்' மையத் தில் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் முன்னோடிகள் 19 பேரின் கதை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

சீக்கியர்களின் உணவு, இசை உள்ளிட்ட பலவற்றின் சுவையையும் கண்காட்சிக்குச் செல்வோர் நேரடியாக ரசித்து தெரிந்துகொள்ள முடியும்.

சீக்கியர்களின் தலைப் பாகையை அணிவது எப்படி என் பதையும் அவர்கள் கற்றுக் கொள்ளலாம். சீக்கிய சமூகத்தை ஏற்படுத்திய குருநானக்கின் 550வது பிறந்தநாள் ஓராண்டு காலம் கொண்டாடப்படுகிறது.

அந்தக் கொண்டாட்டங்களை யொட்டி இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இப்போது சுமார் 12,000 சீக்கியர்கள் வசிக்கிறார் கள் என்று தெரிகிறது.