வியட்னாம், கம்போடியா நாடு களுடன் நல்லுறவைப் பலப்படுத்த சிங்கப்பூர் கடப்பாடு கொண்டிருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரி வித்தது. பரஸ்பரம் நம்பிக்கையின் அடிப்படையில் அந்த உறவுகள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றும் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
கம்போடியாவை 1978ல் வியட்னாம் ஆக்கிரமித்ததன் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்த கருத்துகள் பற்றி மூண்ட சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியானது.
கம்போடியா, வியட்னாம் நாடு களுடன் கூடிய தன்னுடைய உற வுக்கு சிங்கப்பூர் மிக முக்கியத் துவம் அளிப்பதாகவும் கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்று இருந்தாலும் அந்த நாடுகளுடன் சிங்கப்பூர் எப் போதுமே மரியாதையோடும் தோழ மையோடும் நடந்துவந்துள்ளதாக வும் அமைச்சு தெரிவித்தது.
பல துறைகளில் இரு தரப்பு உறவுகள் வளர்ந்து இருப்பதாகவும் பிணைப்புமிக்க, ஐக்கியமான ஆசியானைப் பலப்படுத்த இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வந்திருப்பதாக வும் அறிக்கை குறிப்பிட்டது.
பிரதமர் தெரிவித்த கருத்துகள், சிங்கப்பூர் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பிரதிபலித்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
எந்தவொரு நாடும் மற்ற நாட் டின் சுயாதிபத்திய உரிமைகளை மீறக்கூடாது என்பதே சிங்கப்பூரின் கோட்பாடு. அதோடு, வியட்னாம், கம்போடியாவை ஆக்கிரமித்ததை சிங்கப்பூர் எதிர்க்கவில்லை என்றால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அது விரும்பத்தகாத ஒரு முன்னுதாரணத்தை உரு வாக்கிவிடும் என்றது அறிக்கை.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன், வியட்னாம், கம்போடிய துணைப் பிரதமர்களுடன் தனித் தனியாகத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
அவர்களிடம் சிங்கப்பூர் அமைச்சர் இந்தக் கருத்துகளை விளக்கினார். கடந்த காலங்களில் கடும் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றிருந்த போதிலும் ஒத்துழைப்பு, கலந்துரையாடல், தோழமை ஆகிய வழிகளை தாங்கள் இப்போது பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அந்த நாடு களின் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டதாகவும் அறிக்கை தெரிவித்தது.
பிரதமர் லீ, மே 31ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் 1978ல் கம்போடியாவை வியட்னாம் ஆக்கி ரமித்தது பற்றிக் குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த ஷங்ரிலா மாநாட்டில் தான் ஆற்றிய உரையிலும் திரு லீ இந்த விவ காரம் பற்றி பேசி இருந்தார். பிரத மரின் கருத்துகளை கம்போடியா வும் வியட்னாமும் ஆட்சேபித்தன.