அறப்பணி ஓவியக்கலை கண்காட்சி இன்றும் உண்டு

‘டச் கம்யூனிட்டி சர்வீசஸ்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அறப்பணி ஓவியக் கண்காட்சி ஒன்று இன் றும் நடக்கிறது. 

‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கலைக் கூடம் 1ல்’ வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘டச் கிவ்விங் ஆர்ட்’ என்று குறிப்பிடப்படும் அந்தக் கண்காட்சியில் 70க்கும் அதிக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஓவியங்களைக் கண்காட்சியில் வாங்க முடியும். இலவசமாக நடக் கும் அந்த அறப்பணி கண்காட் சியை சட்ட, சுகாதார அமைச்சு களுக்கான மூத்த துணை அமைச் சர் எட்வின் தோங் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். 

கண்காட்சி மூலம் கிடைக்கும் தொகை இந்த அறநிறுவனத்தின் உதவிச் செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.  

இந்த அறப்பணி அமைப்பு, அறிவுமந்த குறைபாடு உள்ளவர் கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவும் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறது. அந்த நிலையத்தின் சிறப்பு ஓவியச் செயல்திட்டம் பலருக்கும் உதவி வருகிறது. 

அந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓவியக்கலையைப் பயின்ற 14 பேரின் படைப்புகள் இந்தக் கண் காட்சியில் இடம்பெறுகின்றன. 43 வயது சோஃபான் பிள்ளை என்ப வரும் அவர்களில் ஒருவர். இவருடைய படைப்பும் காட்சியில் இடம்பெற்று இருக்கிறது. அவற் றையும் விலைக்கு வாங்கலாம்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon