பிரதமர் லீ: ஆதரவுக் குழுவை அடையாளம்  காண்பதே அடுத்த தேர்தலில் முக்கிய பணி

அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கப் பூரர்கள் நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தாங்கள் நம்புகின்ற ஓர் அணியை அடை யாளம் கண்டு அதற்கு ஆதரவு அளிக்க வேண்டி இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

திரு லீ வெள்ளிக்கிழமை ‘பிசினஸ் சைனா’ என்ற அமைப் பின் விருது வழங்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியையொட்டி கலந்துரையாடல் ஒன்று நடந்தது. அதில் பேசிய திரு லீ, அடுத்த தேர்தலின் முக்கியத்துவம் பற்றி கருத்துத் தெரிவித்தார். சிங்கப்பூ ரில் வரும் 2021 ஏப்ரல் மாதத்திற் குள் தேர்தல் நடக்கவிருக்கிறது.

“சிங்கப்பூர் ஐக்கியமாக இருக் கிறது. நமது பாதுகாப்பு, செழிப்பு, தற்காப்பு எல்லாம் எவற்றைச் சார்ந்து இருக்கிறது என்பது நமக் குத் தெரியும்.

“நம்மை முன்னேற்றி, நாம் எங்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு நம்மைக் கொண்டு செல்லக்கூடிய ஒரு குழுவை அடையாளம் காணக்கூடிய, அந்தக் குழுவுக்கு ஆதரவு அளிக் கக்கூடிய ஆற்றல் நம்மிடமுண்டு என்பதை எல்லாம் நமக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டுவதே அடுத்த தேர்தலில் முக்கியமான தாக இருக்கும் என்று நினைக்கி றேன்,” என்றார் பிரதமர்.

சிங்கப்பூர் தலைமைத்துவ மாற்றத்திற்கு ஆயத்தமாகி வரு வதைக் கருத்தில்கொண்டு பார்க் கும்போது அடுத்த தேர்தலின் முக்கியத்துவம் தெரியவருவதாக அவர் குறிப்பிட்டார்.

தலைமைத்துவ மாற்றம் நல்ல முறையில் இடம்பெறுவது முக்கிய மானது என்ற திரு லீ, “அந்தக் காரியம் சிறந்த முறையில் நடக்க வேண்டும். பொறுப்பை அடுத்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குழு பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.

“நானும் எனது குழுவும் சிங் கப்பூரை அதற்கே உரிய சொந்த வழியில் செயல்படச் செய்ததைப் போல சிங்கப்பூர் தொடர்ந்து செயல்படுமாறு செய்யவேண்டும். இது சிங்கப்பூரை பொறுத்த வரை மிக மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

பிரதமர் திரு லீ, 2022ஆம் ஆண்டில் தனக்கு 70 வயதாகும் போது தன் வாரிசிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நம்புகிறார். நான்காம் தலைமுறை குழுவினர், இப்போதைய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டை தங் களுடைய தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொண்டுள்ளனர்.

திரு ஹெங்கிற்குத் துணை யாக அவர்கள் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

“மேலும் மேலும் பல பொறுப்பு களை அவர்களிடத்தில் ஒப் படைத்து வருகிறேன். அவர்கள் அனுபவத்தைச் சேகரித்துக் கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்வார்கள் என்று நான் கருது கிறேன்,” என்றார் திரு லீ.

இப்போது வரை எல்லாம் நல்லபடியாக முன்னேற்றம் கண்டு வருவது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் கூறினார். இருந்தாலும் இன்னும் பல பணிகள் இருக்கின்றன என்றார் அவர்.

அமைச்சராகும் ஆற்றலுடன் அல்லது அமைச்சர்களைவிட இன் னும் அதிக ஆற்றலுடன்கூடிய வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சி இன்னமும் தேடி வருகிறது என்றும் திரு லீ தெரிவித்தார்.

தேர்தல் எப்போது என்பதை பிரதமர் குறிப்பிடவில்லை என் றாலும் தாங்கள் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக திரு லீ கூறி னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!