மனநலப் பிரச்சினை: புதிய அறப்பணி அமைப்பு உதயம்

மனநலப் பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டு உள்ளோர் அவர்களின் சகாக்களிடமிருந்து ஆதரவு பெற வகை செய்யும் ஒரு புதிய அறப் பணி அமைப்பு தோற்றுவிக்கப் பட்டு இருக்கிறது.

‘மீட்சித்திறன் குழுமம்’ (RC) என்ற அந்தப் புதிய அமைப்பு, பட்டத்தொழிலர்கள் மட்டுமின்றி மனநலப் பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டு இருக் கும் முதலாவது அமைப்பு என்று கூறப்படுகிறது.

மனநலக் கழகம், தேசிய சமூக சேவை மன்றம், ஒருங் கிணைந்த பராமரிப்புக்கான முகவை ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் உருவாகி இருக்கும் மீட்சித்திறன் குழுமம், மனநலப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரும் பட்டத்தொழிலர்களும் சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு தளமாக இருக்கும் என்று அந்தக் குழுமத் தின் நிர்வாக சபை உறுப்பினரும் நிர்வாக இயக்குனருமான கோ ‌ஷுட் லி குறிப்பிட்டார்.

மனநலப் பிரச்சினையில் இருந்து மீட்சி அடைவதற்கான தீர்வுகளை உருவாக்கும் தளமாக வும் புதிய அமைப்பு திகழும். அங்கு மனநலப் பாதிப்பு உள்ளவர் களின் சகாக்கள் ஓர் ஆதரவுக் கட்டமைப்பைப் பெற்றிருப்பார்கள்.

புதிய குழுமம் தன் சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் மனநலப் பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வை அதிகரிக்கும். அந்தப் பிரச்சினை காரணமாக ஏற்படக்கூடிய களங்கத்தைக் குறைக்க பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனநலக் கழகம் போல் அல்லாமல் இந்தப் புதிய குழுமம் மனநலப் பாதிப்புள்ளோரின் சகாக் களை பட்டத்தொழிலர்களைப் போலவே சம பங்காளிகளாக நடத்தும் என்றார் அவர்.

அவர்களின் அனுபவத்தை ஒரு வளமாகக்கொண்டு புதிய செயல்திட்டங்களை இந்தப் புதிய அமைப்பு உருவாக்கும்.

புதிய குழுமம் தனக்கே உரிய தனித்தன்மைகளைக் கொண்ட தாக இருக்கும் என்று தெரிவித்த திருவாட்டி கோ, மனநலப் பாதிப்பு உள்ளோரின் சகாக்கள் பலவற்றி லும் பங்கெடுத்துக்கொள்வதில் இந்த அமைப்பு ஒருமித்த கவனத் தைச் செலுத்தும் என்று கூறினார்.

இந்தப் புதிய குழுமத்தின் கீழ் ஐந்து திட்டப் பயிலரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின் றன. இரண்டு பயிற்சிப் பயிலரங்கு களும் நடந்துள்ளன.

இம்மாத முடிவில் மூன்றாவது பயிலரங்கு நடக்கிறது. மீட்சி அடைவதற்கான வழிகளை அந்தப் பயிலரங்கு ஆராயும்.

ஒவ்வொரு பயிலரங்கிலும் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம். பலரும் அவற்றில் கலந்துகொண்டு தங்களுடைய சொந்த நிலவரங் களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!