தெம்பனிசில் உள்ள 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் இன்று நடைபெற உள்ள சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். அங்கு பல்வேறு சுகாதார உரைகள் இடம்பெறும். நேற்று மெரினா பேயில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு உதவ படகோட்டும் நிதி திரட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களைக் கொண்டாடும் நோக்கில் சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள்
1 mins read

