சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் விடுதலை

சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் விடுதலை

1 mins read

சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் டான் பி பெங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தேவாலயத்தின் அறக்கொடை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் அவருக்கு மூன்றாண்டு, இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி சிறைவாசத்தைத் தொடங்கிய அவர், நன்னடத்தை காரணமாக மூன்றில் ஒரு பங்கு சிறைத்தண்டனை குறைக்கப்பட்டு இம்மாதம் முதல் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அந்த நிதி மோசடி தொடர்பில் சிறை சென்ற அறுவரில் நால்வர் சிறைத் தண்டனையை முடித்துவிட்டனர். தேவாலயத்தின் நிறுவனர் கோங் ஹீ, முன்னாள் நிதி நிர்வாகி சியூ எங் ஹான் ஆகிய இருவரும் இன்னும் சிறையில் இருக்கின்றனர். சுமார் $50 மில்லியன் பணத்தை மோசடி செய்ததற்காக அறுவருக்கு ஏழு மாதங்கள் முதல் மூன்றரை ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.