இறந்தவர்களின் கண்ணியம் காக்க ஈமச்சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள்

ஈடச்சடங்கு ஏற்பாட்டாளர்கள், இறந்தோரைக் கண்ணியப்படுத் தும் வகையில் அவர்களின் உடலை உரிய மரியாதையுடன் முறையாகக் கையாளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப் பட்டு இருக்கிறது.

மரணம் அடைந்த தன் தாயா ரின் நல்லுடல் ஈமச்சடங்கிற்காக எப்படி ஆயத்தப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்பதற்காக கேலாங் பாருவில் உள்ள அத்தகைய ஈமச் சடங்கு ஏற்பாட்டு நிலையம் ஒன் றுக்கு கடந்த பிப்ரவரியில் சென்ற சுனில் குமார், 54, என்பவர் அங்கு கண்ட நிலவரங்களால் கவலை அடைந்து தன் கவலைகளை எல் லாம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் பக்கத்திற்கு மே 20ஆம் தேதி கடிதமாக எழுதினார்.

இவருக்கு ஆதரவாக திரு வி. பாலு, 52, என்பவர் குரல் கொடுத் தார். 2015ல் தன்னுடைய தந்தை மரணம் அடைந்தபோது இதே போன்ற சூழலைத் தான் அங்கு சந்தித்ததாகவும் அந்தக் ஈமச் சடங்கு நிலையம் அமைந்துள்ள பகுதியைச் சீரமைக்க வேண்டும் என்றும் திரு பாலு, கேட்டுக் கொண்டார். இவர்கள் எழுப்பிய பிரச்சினை பெரிய அளவில் விவாதிப்புகளைக் கிளப்பிவிட்டு இருக்கின்றன.

சில ஈமச்சடங்கு ஏற்பாட்டு நிலையங்களில் நிலவரங்கள் சரி யில்லை என்பது தெரியவந்துள் ளது. இதனையடுத்து ஈமச்சடங்கு இயக்குநர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சங்கம், இதன் தொடர்பில் தேசிய சுற்றுப் புற வாரியத்தை இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் சந்தித்து தன் கவலைகளைத் தெரிவிக்க லாம் என்று நம்புகிறது.

அதோடு, இந்தத் தொழில் துறைக்குச் சாத்தியமான மேம்பாடு கள் பற்றி விவாதிக்கலாம் என்றும் 37 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் தலைவர் ஆங் ஸி ஷெங் தெரிவித்துள்ளார்.

திரு குமார் மற்றும் திரு பாலு இருவரின் கடிதங்களுக்கும் பதி லளித்த தேசிய சுற்றுப்புற வாரியம், அடுத்த 10 ஆண்டுகளில் ஐந்து புதிய ஈமச்சடங்கு ஏற்பாட்டுக் கூடங்களுக்கான நிலப் பகுதியை ஒதுக்கப்போவதாகக் கூறியது.

இப்போதைய நடைமுறைகளை எப்படி எப்படியெல்லாம் மேம்படுத்த லாம் என்பது பற்றி இந்தத் தொழில்துறை மற்றும் ஏற்புடைய சமய அமைப்புகளுடன் கலந்துரை யாடப் போவதாகவும் இந்த வாரி யம் தெரிவித்து இருக்கிறது.

திரு குமாரின் புகார்கள் பற்றி புலன்விசாரணை நடந்து வருவ தாகவும் குமார் தெரிவித்த ஈமச் சடங்கு ஏற்பாட்டு நிலையம் செயல்படவில்லை என்பது சென்ற மாதம் தன் அதிகாரிகள் நடத்திய பரிசோதனை மூலம் தெரியவந்த தாகவும் வாரியம் கூறியது.

சென்ற ஆண்டு ஜனவரி நிலவரப்படி சுமார் 30 ஈமச்சடங்கு ஏற்பாட்டு நிலையங்கள் நடப்பில் இருந்தன. அவற்றில் ஈமச்சடங்கிற் கான சமய கட்டுப்பாடுகளோ இதர சம்பிரதாயங்களோ இல்லை.

இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் உடல்களைப் பதப்படுத்தும் வசதிகளுடன் கூடிய உரிமம் பெற்ற 23 ஈமச்சடங்கு ஏற்பாட்டு நிலையங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை இப்போது 21ஆகக் குறைந்து இருக்கிறது என்று வாரியம் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!