சுடச் சுடச் செய்திகள்

மூத்த அமைச்சர் தர்மன், கல்வி அமைச்சர் ஓங் பிரிட்டன் பயணம்

மூத்த அமைச்சர் தர்மன் சண்மு கரத்னம் நேற்று முதல் இம்மாதம் 13ஆம் தேதி வரை லண்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார். கல்வி அமைச்சர் ஓங் யி காங், வெளி யுறவு மற்றும் வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் டான் வூ மெங் ஆகியோரும் லண்டன் செல்கிறார்கள் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

சிங்கப்பூருக்கும் லண்டனுக் கும் இடையில் நிலவும் வலுவான பலதுறை உறவை மறுஉறுதிப் படுத்தும் வகையில் இந்தப் பய ணம் இடம்பெறுவதாகத் தெரிவிக் கப்பட்டு உள்ளது. 

‘எதிர்கால சிங்கப்பூர், பிரிட்டன் பங்காளித்துவ உறவுத் திட்டம்’ தொடங்கப்பட்டு உள்ளது. அது முதல் இரு தரப்புகளுக்கும் இடை யில் இடம்பெற்று வரும் பரஸ்பர வருகைகளில் மேலும் ஒன்றாக இந்தப் பயணங்கள் அமைகின்றன.  

பிரிட்டன்  பயணத்தின்போது பல உடன்பாடுகள் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன், கல்வி அமைச்சர் ஓங், டாக்டர் டான் ஆகியோர் ‘சிங்கப்பூர் இருநூறு ஆண்டுகள், 1819=2019 எதிர்காலத்திற்கான சிங்கப்பூர்= பிரிட்டன் பங்காளித் துவம்’ என்ற தலைப்பில் லண்டன் மாநகர நிர்வாகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.

அந்த நிகழ்ச்சியில் திரு தர்மன் தொடக்க உரையாற்றுவார். கல்வி அமைச்சர் முக்கிய உரை நிகழ்த்து வார். மாறி வரும் உலகச் சூழலில் சிங்கப்பூரும் பிரிட்டனும் தங்கள் பங்காளித்துவ உறவை எப்படி ஆழப்படுத்த முடியும் என்பதை எல்லாம் அமைச்சரின் உரை வெளிச்சம் போட்டுக்காட்டும்.  

சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக் கும் இடையில் ஒத்துழைப்புகள் பற்றி விவாதிக்கும் குழு விவாதம் ஒன்றில் டாக்டர் டான் கலந்து கொள்வார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon