உலக சுகாதார கருத்தரங்கில் அமைச்சர் கான்

உலக சுகாதார கருத்தரங்கில் அமைச்சர் கான்

1 mins read

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், சீனாவின் சிங்டோ நகரில் நடக்கும் 'போவோ' உலக சுகாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.

அந்தக் கருத்தரங்கு இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை நடக்கிறது. அமைச்சர் களுக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் நடக்கும் உயர்நிலை வட்ட மேசை மாநாட்டில் அவர் பங்கெடுத்துக்கொள்வார்.

சீனாவின் சிங்டோ நகரில் நடக்கும் அந்த உலக சுகாதார கருத்தரங்கிற்கு 'ஆசியா போவோ கருத்தரங்கு' என்ற அமைப்பு முதன்முதலாக ஏற்பாடு செய்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு, மூப்படைதல், சீன நாட்டு வைத்தியம், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இடம்பெறும் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை உள்ளிட்ட உலக சுகாதார அம்சங்கள் பற்றி அந்தக் கருத்தரங்கு விவாதிக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சருடன் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் செல்கிறார்கள்.