சாலை தடுப்பில் வேன் மோதி மருத்துவமனையில் ஆடவர்

சாலை தடுப்பில் வேன் மோதி மருத்துவமனையில் ஆடவர்

1 mins read
63cea9ee-4f50-4a12-b7c4-9ae5fc440a37
-

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் சாலைத் தடுப்பு ஒன்றில் மோதிய வேன் பள்ளத்தில் விழுந்துவிட் டது. அதனையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த 31 வயது ஆடவர் சுயநினைவுடன் செங் காங் பொது மருத்துவமனைக் குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த விபத்து பற்றி நேற்று அதிகாலை 5.58 மணிக்கு போலிசுக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேன், அந்தத் தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துவிட்டது.

அப்போது வேனை ஓட்டி வந்த ஆடவர் வேனிலிருந்து வெளியே விழுந்து சரிவில் புரண்டு கீழே தரையில் வந்து விழுந்ததை நேரே ஒருவர் பார்த்ததாக வான் பாவ் செய்தித் தாள் தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய வாகனத் தின் முன்பக்க பகுதிகள் கழன்று விழுந்து கிடந்ததையும் கண் ணாடி நொறுங்கி இருந்ததையும் படங்கள் காட்டின. போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது.