உந்து நடமாட்டச் சாதனம் தொடர்பான தீ விபத்துகள்

உந்து நடமாட்டச் சாதனம் தொடர்பான தீ விபத்துகள்

1 mins read
a140caf0-a401-478c-99d0-21c116ac0c87
உந்து நடமாட்டச் சாதன பேட்டரிகளுக்கு மின்சாரத்தை ஏற்றிய போது சனிக்கிழமை இரண்டு தீ விபத்துகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக் -

அடுக்குமாடி வீடுகளில் சனிக் கிழமை உந்து நடமாட்டச் சாத னங்கள் தொடர்பில் இரண்டு தீ விபத்துகள் நிகழ்ந்தன. மரைன் டெர்ரஸ் புளோக் 52ல் 13வது மாடி வீட்டில் சமையல் அறையில் உந்து நடமாட்டச் சாதனம் தீப் பிடித்துவிட்டது.

தண்ணீரை ஊற்றி அந்தத் தீயை குடியிருப்பாளரே அணைத்துவிட்டார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 5.35 மணிக்கு நிகழ்ந்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் கூறியது.

தீ விபத்து காரணமாக காயம் அடைந்த அந்தக் குடியிருப்பாளர் சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப் பட்டார்.

அங் மோ கியோ அவென்யூ 3ல் இருக்கும் புளோக் 301ல் ஆறாவது மாடி வீடு ஒன்றில் சனிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு உந்து நடமாட்டச் சாதனத்தின் பேட்டரி படுக்கை அறையில் தீப்பிடித்துக் கொண் டது. அதை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அணைத்த னர். இந்தச் சம்பவத்தில் யாருக் கும் காயமில்லை.

இந்த இரண்டு தீ விபத்துக ளிலுமே உந்து நடமாட்டச் சாதன பேட்டரிகளுக்கு மின்சாரத்தை ஏற்றிக்கொண்டிருந்தபோது தீ மூண்டதாக புலன்விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இத்தகைய போக்குவரத்துச் சாதனங்கள் தொடர்பான தீ விபத்துகளைத் தவிர்த்துக்கொள் ளும் வகையில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி பொதுமக்க ளுக்குத் தற்காப்புப் படை ஆலோ சனை கூறி இருக்கிறது.

உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பில் சென்ற ஆண்டில் 74 தீ விபத்துகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.