சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

1 mins read

புற்றுநோயைக் குணப்படுத்தும் சுகாதார துணைப்பொருள் தங்களிடம் இருப்பதாக பொய் கூறுவதை நிறுத்துமாறு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தை சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

ரிவே சிங்கப்பூர் என்னும் அந்நிறுவனம் பொய் விளம்பரங்களைச் செய்ய வேண்டாம் என தனது விற்பனையாளர்களிடம் அறிவுறுத்துமாறு ஆணையம் அதனைக் கேட்டுக்கொண்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வரும் வேளையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்கு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் பதில் கூறினார்.

சட்டத்தை மீறிய சம்பவங்கள் நடந்திருந்தால் தேவையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

உடல்நலம் தொடர்பான தயாரிப்புகள் பற்றி பொய்யாக விளம்பரம் செய்வோர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.