நானூறுக்கு மேற்பட்ட தேசிய சேவையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததன் தொடர்பில் ஆப்சன் கிஃப்ட் என்னும் நிறுவனத்துக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அந்தத் தகவல்கள் கசிந்தன.
சிங்கப்பூர் ஆயுதப் படை, உள்துறைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 427 சேவையாளர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இணைய நுழைவு அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்தன.
'யூனிக்ரிவார்ட்ஸ்' என்னும் இணைய வாசல் வழியாக வெகு
மதிகளை பெற்று வந்த சேவையாளர்களின் விவரங்களே அவை. அந்த இணைய வாசலை ஆப்சன் கிஃப்ட் நிறுவனம் நிர்வகித்து வந்தது.
முகாம் பயிற்சி அல்லது கற்றலின்போது திறன்களை வெளிப்படுத்தியவர்களுக்கும் குழந்தை பெற்றது போன்ற நன்நிகழ்வுகளின்போதும் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொருவரின் வெகுமதி தொடர்பாக தனித்தனியாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் தவறுதலாக அதன்தொடர்பிலான பெரும்பாலானோருக்குச் சென்றது. வெகுமதி கேட்டு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பார்த்தபடி இயங்காததை பிடிபிசி எனப்படும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்தது.
விசாரணை நடத்தப்பட்டதில் ஆப்சன் கிஃப்ட் நிறுவனம் தனி
நபர் தகவல் பாதுகாப்பு சட்டப் பிரிவு 24ஐ மீறியதாக கடந்த வியாழக்
கிழமை ஆணையம் அறிவித்தது.
தேசிய சேவையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அந்த நிறுவனத்தையே சாரும் என்று ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

