கேலாங்: இரவில் பெண்ணிடம் கத்திமுனையில் கொள்ளை

கேலாங்: இரவில் பெண்ணிடம் கத்திமுனையில் கொள்ளை

1 mins read

கேலாங் லோரோங் 22ல் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய கொள்ளை தொடர்பாக 29 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடமிருந்து ஆடவர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்ததாக நேற்று முன்தினம் இரவு 10.50 மணியளவில் போலிசுக்குத் தகவல் சென்றது.

அதனைத் தொடர்ந்து பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கைபேசி ஒன்றும் 2,000 வெள்ளிக்கும் மேற்பட்ட ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கண்காணிப்பு படச் சாதனங்களில் பதிவான காட்சிகள் ஆகியவற்றின் பலனாக குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.

ரங்கூன் ரோட்டில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர்.

ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறை, குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் ஆகியன குற்றவாளிக்குத் தண்டனையாக விதிக்கப்படலாம்.