கடுமையாக்கப்பட்ட சட்டத்தின்கீழ் 12 பல்கலைக்கழக மாணவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்

மறுபரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் புரிந்த பாலியல் குற்றங்களுக்காக 12 மாணவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.

பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடத்தை குழுவில் முன்வைக்கப்பட்ட மொத்தம் 25 சம்பவங்களின் பாதி அளவாக அந்த எண்ணிக்கை உள்ளது. 

மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்ட அறிக்கையில், நான்கு குற்றவாளிகள் இரண்டு ஆண்டு இடைநீக்கமும் எட்டு பேருக்கு ஓராண்டு இடைநீக்கமும் தண்டனையாகப் பெற்றிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

மறுபரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை நேற்று குழுத் தலைவரும் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினருமான திருவாட்டி கே குவோக் மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்குத் தெரிவித்தார்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon