இயற்கையான முறையில் சிங்கப்பூரில் பயிராகும் காய்கறிகள்

இயற்கையான முறையில் சிங்கப்பூரில் பயிராகும் காய்கறிகள்

1 mins read
b551d903-b60a-459c-9778-3895d590ae63
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (இடது) செங்குத்து தோட்டத்தின் வசதிகளைச் சுற்றிக்காட்டும் 'ஸ்கை கிரீன்ஸ்' காய்கறித் தோட்ட நிறுவனர் ஜேக் இங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முதல் செங்குத்து தோட்டம், நகரச் சூழலில் வளர்க் கப்படும் இயற்கையான காய்கறி களுக்கான உலகின் முதல் தேசிய தர சான்றிதழைப் பெற்றுள்ளது.

'ஸ்கை கிரீன்ஸ்' எனப்படும் செங்குத்தான காய்கறித் தோட்டம், இயற்கைப் பொருள் உற்பத்திக்கான சிங்கப்பூரின் 632 என்ற தர நிர்ண யத்தை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி யின் முன்னிலையில் நேற்று பெற்றது.

இயற்கையான காய்கறிகளுக் கான தேவை அதிகரித்து வரு வதால் உள்ளூர் தோட்டங்களுக்கு வளர்ச்சி வாய்ப்பு நிலவுவதாக திரு மசகோஸ் தெரிவித்தார்.

குறைந்த நிலப்பகுதி, மண், தண்ணீர் பற்றாக்குறை, எரிசக்தி பயன்பாட்டாலும் மனிதவளப் பற்றாக்குறையாலும் ஏற்படும் அதிகமான செலவு போன்று நகர்ப்புறத் தோட்டங்கள் எதிர் நோக்கும் சவால்களைச் சமா ளிக்கும் வகையில் இந்தத் தர நிர்ணயம் 2017ல் உருவாக்கப் பட்டது.

லிம் சூ காங்கில் உள்ள இந்தத் தோட்டம் சிறிய செடிகளை மட்டுமே வளர்க்கிறது. பெரிய செடிகளைவிட இந்தச் செடிகள் கூடுதலான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.

பாரம்பரிய தோட்டங்களைவிட 10 மடங்கு அதிகமான காய் கறிகள், 9 மீட்டர் செங்குத்தான அடுக்கு களைக் கொண்டுள்ள இந்தத் தோட்டத்தில் விளை கின்றன.

இந்தக் காய்கறிகள் என்டியுசி ஃபேர்பிரைசுக்கு மட்டுமே விற்கப் படுகின்றன. செயற்கையான உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாது இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகள் இவை.