புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை விரைவில் வாங்க வசதி

அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல், வீடு வாங்கு பவர்கள் விண்ணப்பித்த அடுத்த நாளே வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டைப் பதிவு செய்ய முடியும். மேம்படுத்தப்பட்டுள்ள எஞ்சி உள்ள வீட்டு மறுவிற்பனைத் திட்டத்தின்கீழ், மொத்தம் 123 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு உள்ளன. முந்தைய வீட்டு விற் பனைத் திட்டத்தில் விற்கப்படாத வீடுகளை எந்த நேரத்திலும் வாங்க இந்தத் திட்டம் வகை செய்கிறது.

தேவைக்கேற்ப கட்டி விற்கப் படும் (பிடிஓ) திட்டத்தில் விற்கப் படாத வீடுகள் முன்னதாக ஆண்டிற்கு இருமுறை மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டன.

விற்பனைக்கு விடப்பட்டுள்ள 123 வீடுகளில், 105 வீடுகள் அங் மோ கியோ, புக்கிட் மேரா, தோ பாயோ உள்ளிட்ட முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் உள்ளன. எஞ்சிய 18 வீடுகள் புக்கிட் பாத்தோக், ஜூரோங் வெஸ்ட் போன்ற முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் உள்ளன.

எனினும், சில வீடுகளைக் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். விற்ப னைக்கு விடப்பட்டுள்ள வீடு களில் சீனர்கள் 26 வீடுகளை மட்டுமே வாங்க முடியும். மாறாக, மலாய்க்காரர்கள் 115 வீடுகளையும் இந்தியர்களும் மற்ற இனத்தவர் களும் 119 வீடுகளையும் வாங்க முடியும்.

வீட்டின் அளவும் பொருட்படுத் தக்கூடிய ஓர் அம்சமாக இருக் கக்கூடும். விற்பனைக்கு விடப் பட்டுள்ள கிட்டத்தட்ட பாதி வீடுகள், அதாவது 57 வீடுகள் மூவறை வீடுகள். அத்துடன், 17 வீடுகள் மூன்று தலைமுறைகளுக் கான வீடுகள். அத்தகைய வீடு களில் திருமணமான பிள்ளை களுடன் பெற்றோரும் சேர்ந்து வசிக்க வேண்டும்.

முதன்முறையாக வீடு வாங்கு வோரில் பெரும்பாலானோரின் விருப்பம் நான்கறை வீட்டை வாங்குவதே. அத்தகைய 23 வீடுகள் இந்தத் திட்டத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!