'வட்டார சட்டங்களில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்'

'வட்டார சட்டங்களில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்'

2 mins read
6e4317ea-230c-4db8-8317-593e7248eb6c
சிங்கப்பூரை இவ்வட்டாரத்தின் சட்ட நிலையமாக மேம்படுத்த அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆசிய நாடுகளின் சட்டங்களிலும் சட்ட கல்விமான்கள் ஆழமான அளவில் நிபுணத்துவம் பெற்று இருப்பது அவசியம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண் முகம் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பத்தாண்டுகளில் வட்டார நாடுகள் வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள தால் வட்டார நாடுகளின் சட்டங் களில் நிபுணத்துவம் பெற்றிருப் பது சிங்கப்பூருக்கு நல்ல வாய்ப் பாக அமையும் என்றார் அவர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் புக்கிட் தீமா வளாகத் தில் நேற்று 16வது ஆசிய சட்ட கல்வி நிலைய கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அவர் உரை யாற்றினார்.

இந்தக் கருத்தரங்கை என்யுஎஸ் சட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் கருத்தரங்கில் உலக நாடு களிலிருந்து சட்ட கல்விமான்கள் கலந்துகொள்கின்றனர்.

சுற்றுப்புறம், மனித உரிமை, தகவல் தொடர்பு போன்ற துறை களில் ஆசிய நாடுகள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல்கள் இந்தக் கருத்தரங்கில் விவாதிக் கப்படவிருக்கின்றன.

இந்த வட்டாரம் வளர்ச்சி காணும் என பகுப்பாய்வு நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆசிய மேம்பாட்டு வங்கியின் அறிக்கையில் 2030ஆம் ஆண்டு வாக்கில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவ் வட்டார பங்கு மட்டும் 40 விழுக் காடு என்றும் 2050ஆம் ஆண்டு வாக்கில் இது 50 விழுக்காடாக இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவற்றை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் சண்முகம், இத்தகைய பொருளியல் வளர்ச்சி காரணமாக சட்ட நிறுவனங்கள் போன்ற நிபுணத்துவ சேவை களுக்கு தேவை அதிகரிக்கும் என்றார். இதற்கு உதாரணமாக திட்ட நிதி, உள்கட்டமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் நிபுணத்துவம் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார்.

இவ்வட்டாரத்தில் சிங்கப்பூரை முக்கிய சட்ட நிலையமாக மேம் படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் ஆழமான கடப்பாடு கொண்டி ருப்பதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.