'தேசிய சேவையாளரைக் காப்பாற்ற ஐவர் போராடினர்'

'தேசிய சேவையாளரைக் காப்பாற்ற ஐவர் போராடினர்'

1 mins read
cdbfdb8b-8bbc-48b6-bfa4-5837f76f620a
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளான கென்னத் சோங் சீ பூன், நாஷான் முகம்மது நாசி ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதால் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. (இடம்) இந்த வழக்கில் நேற்று முகம்மது நூர் ஃபத்வா முகம்மது நேரில் சாட்சியமளித்தார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்   -

சுவாசக்கருவி, கயிறு, உயிர் காக்கும் மிதவை போன்றவற்றைப் பயன்படுத்தி கிணற்றில் தள்ளப் பட்ட முழுநேர தேசிய சேவையாளரைக் காப்பாற்ற ஐந்து அதிகாரிகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கார்ப்பரல் கோக் யுயென் சின் கிணற்றில் மூழ்கி இறந்தது தொடர்பான வழக்கு விசாரணை யில் இந்த விவரம் தெரிவிக்கப் பட்டது.

இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்த விசாரணையில் சம்பவத்தன்று இரவில் பணியிலிருந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரி முகம்மது நூர் ஃபத்வா முகம்மது, 34, சாட்சிய மளித்தார்.

"அவர் மேலே வரவில்லை. நாங்களும் நீரில் மூழ்கி அவரைத் தேடிப்பார்த்தோம். ஆனால் அவர் உள்ளே இருப்பதற்கான அடை யாளமே இல்லை," என்று நூர் ஃபத்வா சொன்னார்.

தேசிய சேவையாளர் கார்ப்பரல் கோக்கை கிணற்றில் தள்ளியவர் நூர் ஃபத்வா. இதனை ஒப்புக் கொண்ட அவருக்கு ஏற்கெனவே ஓராண்டு, நான்கு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள் ளது.

கார்ப்பரல் கோக் தேசிய சேவையை முடித்துவிட்டதால் அதனைக் குறிக்கும் வகையில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது அவர் 12 மீட்டர் ஆழ் கிணற்றில் தள்ளப்பட்டார்.

மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தர வாசியுமான கார்ப்பரல் கோக் நீருக்கு மேலே வராததால் கிணற்றி லிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 36 நிமிடங் களுக்கு பிறகு அவர் மேலே கொண்டுவரப்பட்டார்.

துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் இந்தத் துயரச் சம்ப வம் நடைபெற்றது.