இவ்வாண்டின் 3வது காலாண்டில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முதலாளிகள் நம்பிக்கையோடு இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 15% முதலாளிகள் தங்களுடைய நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் மூன்று விழுக்காட்டினர் வேலை வாய்ப்புக் குறையலாம் என்று கூறி யுள்ளனர். இதர 77% பெரிய அளவில் மாற்றமிருக்காது என்று நம்புகின்றனர். மனிதவள நிறுவனமான 'மேன்பவர் குரூப் எம்ப்ளாய்மெண்ட்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

