தீவு விரைவுச் சாலையில் அனுமதி யின்றி பள்ளம் தோண்டி முக்கிய தண்ணீர்க் குழாயை சேதப்படுத்திய கட்டுமான நிறுவனத்துக்கு நேற்று 44,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட திட்ட வரைபடம் இல்லாமல் நிலம் தோண்டும் பணியில் மெகாஸ் டோன் ஹோல்டிங்ஸ் ஈடுபட்டது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தேசிய நீர் முகவை யான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
இதனால் 300 மி.மீட்டர் விட்ட முள்ள பிரதான தண்ணீர்க் குழாய் சேதமடைந்தது. இதையடுத்து 1.8 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணானது.
இதையடுத்து தண்ணீர்க் குழாய் உள்கட்டமைப்பு வசதி களைப் பாதுகாக்கும் பொதுப் பயனீட்டுக் கழகச் சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் சாட்ஸ் உள்விமானச் சேவை நிறுவனத் துக்கு தண்ணீர் விநியோகம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப் பட்டது.
இந்த நிலையில் குழாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உடன டியாக பழுதுபார்ப்புப் பணி மேற் கொள்ளப்பட்டது என்று பியுபி கூறியது.
முன் அனுமதியின்றி நிலம் தோண்டும் பணியில் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டதால் 1.8 மில்லியன் லிட்டர் நீர் வீணானது.

