பாலியல் ஒழுங்கீனம்; 12 பேர் வெளியேற்றப்பட்டிருக்கலாம்

பாலியல் ஒழுங்கீனம்; 12 பேர் வெளியேற்றப்பட்டிருக்கலாம்

1 mins read
0d30b1d7-1a2f-43e7-aee7-7739be403e4c
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பாலியல் ஒழுங்கீனச் சம்பவங்களில் கடுமையான தண் டனைகளை விதிக்க பரிந்துரை செய்துள்ள மறு ஆய்வுக்குழு, முன்பு நடந்த சம்பவங்களில் 12 பேருக்கு கடுமையான தண் டனைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.

அண்மையில் மறுஆய்வுக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை தேசிய பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

அதில் பாலியல் ஒழுங் கீனங்களில் ஈடுபடும் மாண வர்களை பல்கலைக் கழகத்தி லிருந்து வெளியேற்றுவதும் ஒன்று.

இதன்படி பார்த்தால் கடந்த மூன்று ஆண்டுகள் நடைபெற்ற பாலியல் ஒழுங்கீனச் சம்பவங்களில் 12 பேர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று மறுஆய்வுக் குழு தெரி வித்தது.